லலித் மோடி செய்த சதியால் சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு தடை: வைகோ கண்டனம்

லலித் மோடியின் சதி திட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகளால், ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் பிசிசிஐ முன்னாள் தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதித்திட்டம் வகுத்ததாக செய்திகள் வெளியாகின. இதில் பீகார் கிரிக்கெட் சங்கத்தை பின்னணியில் இருந்து லலித்மோடி இயக்கியுள்ளதாக கூறப்பட்டது.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது கூறப்பட்ட புகார்களின் உண்மையை விரைவாகக் கண்டறிந்து, கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்த அணியையும், கிரிக்கெட் விளையாட்டையும் நசுக்கி விடாமல், பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Check Also

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் …