வடசென்னை மாவட்ட நாடார் பேரவை வெள்ளி விழா மற்றும் முப்பெரும் விழா…

வடசென்னை மாவட்ட நாடார் பேரவையின் 25 வது ஆண்டு வெள்ளி விழா, பொங்கல் திருவிழா, நல உதவிகள் வழங்கும் விழா என ” முப்பெரும் விழா” , பழைய வண்ணை ஜி.ஏ. ரோட்டில் மரகதம் மாளிகையில், 12.01.2021, மாலை 4 மணியளவில் கோலகலமாக தொடங்கியது.

வடசென்னை மாவட்ட தலைவர் திரு. கராத்தே ச. ரவி தலைமை தாங்க, வரவேற்புரையினை வடசென்னை மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன் நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட சமத்துவ நாயகரும் சமுதாய சக்ரவர்த்தியுமான திரு. A. நாராயணன் Ex. MLA., அவர்கள், (நிறுவனர் & தலைவர் நாடார் பேரவை, சமத்துவ மக்கள் கழகம்) பொங்கல் விழா மற்றும் வெள்ளி விழாவின் சிறப்புகளை எடுத்துரைத்து, நாடார் பேரவை சார்பாக வருடந்தோறும் இந்த விழாவில் கலந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டவர், அரசு தரும் நல உதவிகளையும் தாண்டி நம் சமுதாய மக்களின் நல்வாழ்விற்கும் இது போன்ற உற்சாகமான விழாவும் அவசியம் தேவை என குறிப்பிட்டவர், இவ் விழா சீரும், சிறப்பாக நடத்திடும் நாடார் பேரவை நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். விழாவின் குறிப்பிடதக்க, ஆச்சரியப்படுத்திடும் வகையில் தலைவரது மகன் திரு.N. கார்த்திக் தனது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் நாடார் பேரவை இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கு கொண்டு சிறப்பித்த விழாவின் நன்றியுரையினை மாவட்டர் பொருளாளர் திரு. G.T. சிவா வழங்க, மீண்டும் இது போன்ற விழாவில் எப்போது சந்திப்போம் என்கிற சமுதாய உணர்வுடன் கேள்வியினை எழுப்பிய மக்கள் கூட்டத்தை கண்டபோது நமக்கும் அத்தகைய ஆசை உண்டானது தான் நிஜம்.

செய்தியாக்கம், படங்கள், ஒளிப்பதிவு:
“கிங்மேக்கர்” திரு. Ln.B.செல்வம்

Check Also

காவல்துறை உதவி ஆணையாளருடன் “ஓர் இனிய சந்திப்பு”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் …


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71