வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 80 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களும், “ரீபண்ட்” கோருபவர்களும் ஆன்லைனில்தான் வருமான வரி கணக்கு ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலமாகவோ அல்லது படிவத்திலோ வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள் ஆலோசகர்களின் உதவியை நாடலாம். சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரி அலுவலகங்கள் அமைந்துள்ள ஆயகார் பவன் வளாகத்தில் ஆலோசகர் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலோசகர்கள் 31-ம் தேதி வரை அங்கு பணியில் இருப்பார்கள்.
சென்னை பகுதி அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் ஆயகார் பவன் வளாகத்திலும், அதேபோல், தாம்பரம் பகுதி அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் தாம்பரம் ஆயகார் சேவை கேந்திராவிலும் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …