வருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு கவுண்டர்கள்

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் நெருங்கி வருவதால், அங்கு வரும் மக்களுக்கு உதவும் பொருட்டு, சென்னை ஆயக்கர் பவனில் சிறப்பு வருமான வரி படிவம் தாக்கல் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

வருமான வரி தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் வருமான வரி தாக்கல் செய்ய மக்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதன் வழிமுறைகளை எளிமையாக்கும் நோக்கத்துடன் 34 சிறப்பு கவுண்டர்களை வருமானவரி தலைமை ஆணையர் ஸ்ரீவஸ்தவா, சென்னை ஆயக்கர் பவனில் நேற்று திறந்து வைத்தார்.

அங்கு வரும் மக்களுக்கு படிவம் நிரப்புதல் முதல் நிரப்பப்பட்ட படிவத்தை  தாக்கல் செய்வது வரை அங்குள்ள ஊழியர்கள் உதவுகின்றனர்.  இந்த சிறப்பு முகாம் வரும் 31ம் தேதி வரை காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை ந்டைபெறும் என்றும், தாம்பரம் மக்களுக்கு என்று தனி கவுண்டர் செயல்படும் என்றும்  வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.