வரும் 27ந்தேதி வானில் நிலா இரத்தச் சிவப்பாக தெரியும் சூப்பர் மூன்: அதிசயம்

இம்மாதம் 27ம் தேதி வானில் தென்பட உள்ளது சூப்பர் மூன்.  இந்த முறை 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவீதம் மேலும் பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அன்று தான் முழு சந்திர கிரகணமும் நிகழ்ப்போகிறது. இதனால் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டு சிதறுவதால் நிலவானது ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்த சிவப்பு வரையிலான நிறங்களில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வை வட, தென் அமெரிக்க கண்டங்களிலும், ஐரோப்பிய, ஆப்ரிக்க, நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் தான் பார்க்க முடியும். அடுத்த சூப்பர் மூன் சந்திரகிரகணம் 2033ம் ஆண்டில் தான் நிகழும் என கூறுகின்றனர்.

Check Also

அரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்

கிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் …