புது முயற்சி! “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இன்றைய இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டவரும் அவரது ரசிகர்களால் ” தளபதி” என அன்புடன் அழைக்கப்படும் திரு. விஜய் அவர்கள் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் “பிகில்” திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை முன்னிட்டு இவரது மக்கள் இயக்கம் வட சென்னை மாவட்டம் சார்பாக தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் வித்தியாசமான முறையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

இராயபுரம் போக்குவரத்து காவல் அதிகாரிகளுடன் இணைந்து இப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை அழைத்து இலவசமாக தலைக்கவசம் தந்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சுமார் 100 நபர்களுக்கு மேல் தலைக்கவசம் வழங்கினர்.

மேலும் தலைக்கவசம் உயிர்காக்கும் என்றும் வாகன ஓட்டுபவரும், பின் இருக்கையில் அமருபவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டியதை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்துவதாகவும், பேனர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வைக்ககூடாது என தளபதி விஜய் அவர்கள் கூறியுள்ளதால், ஒரு புதிய முயற்சியாக “தளபதி” விஜய் அவர்கள் உத்தரவின் பேரில் இத்தகைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக விஜய் மக்கள் இயக்கத்தின் வடசென்னை மாவட்ட பொருளாளர் திரு. Ln. N. தினேஷ்ராஜா நம்மிடம் தெரிவித்தார்.

ஒளிப்பதிவு: “ஜீனியஸ்” K. சங்கர்
படத்தொகுப்பு : அமுரா

Check Also

மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா? சிவகார்த்திகேயன் விளக்கம்

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன், …