விமானத்தை கடத்தியிருக்கலாம்? மலேசியன் பிரதமர் ரஸாக்

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் கடந்த வாரம் மலேசியாவிலிருந்து சீனாவிற்கு சென்றபோது மலேசியா- வியட்நாம் பகுதியில்  காணாமல் போனது. இந்த விமானம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வரவில்லை. எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை இப்பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. எங்களது நாட்டின் வேண்டுகோளை ஏற்று விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விமானம் கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் விமானம் கிடைக்காததால், அந்தமான் வரை தேடுதல் பரப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.

ஆனால் விமானத்தை யாரேனும் கடத்தியிருக்கலாம் என்றும் அதன் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை ஒருவர் துண்டித்து இருக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்தே, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இதனடிப்படையிலும் விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை. இடைவிடாமல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் மீது அக்கறையும் அன்பும் வைத்துள்ளோம். தென்சீனாவில் விமானத்தை தேடும் பணி முழுமையடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

Check Also

மலேசியாவுக்கு இது மோசமான வருடம்: பிரதமர் நஜீப் ரஸாக் வருத்தம்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுடப்பட்டு விபத்து ஏற்பட்டதாக வந்த செய்தி அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய பிரதமர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *