வட சென்னையில், சென்னை மாநகர போலிஸ் கமிஷ்னர் ஏ.கே. விஸ்வநாதன் திடீர் விசிட்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதில் ராயபுரம், தண்டையார்ப்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளில் எண்ணிக்கை எகிறி வருகிறது. அது மட்டுமல்லாமல் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையில் 1,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையால் வட சென்னை காவல் நிலையங்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. ஏ. கே. விஸ்வநாதன் அவர்கள் நேற்று (27.06.2020) காலை ஆய்வு மேற்கொண்டார். திருவொற்றியூர் காவல் நிலையத்தின் சுற்றுபுற சூழலை ஆய்வு மேற்கொண்டது மட்டுமல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பத்திரமாக நிறுத்தி வைக்க காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து தண்டையார்ப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்ற காவல் துறையினர் செயல்படும் விதம் மற்றும் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து வாகன போக்குவரத்து கட்டுப்பாடு செயல்பாட்டினையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வானது ஆணையாளர் அவர்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்” B.செல்வம்

Check Also

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு …