வேலூர் மாவட்ட, SP, காவலருக்கு பாராட்டு…

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சாத்கர்பகுதியைச் சேர்ந்த வளர்மதி (45) இவர் கடந்த ஜூலை மாதம் அதே பகுதியில் மாந்தோப்பு நிலத்தில் ஆடுகள் மேய்த்த வந்த போது மர்ம நபர்கள் அவரை கழுத்து அறுத்து கொலை செய்து காதிலிருந்து கம்பலைபறித்து சென்றார்கள்.

இச்சம்பவம் பேர்ணாம்பட்டு பகுதி அதைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து(SP) மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம்(DSP) ராமமூர்த்தி தலைமையில் தனி படை அமைத்து பேர்ணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தனிப்பிரிவு தலைமை காவலர் பழனி மற்றும் காவலர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த கொலையின் தொடர்புடைய ஓணாங்குட்டைசேர்ந்த ரவி கோட்டச்சேரி சேர்ந்த புகழேந்தி ஆகிய இருவரையும்.3 தேதி பேர்ணாம்பட்டு போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந் நிலையில் பெண் கொலை வழக்குகில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடிச்சு குடியாத்தம்(DSP) தலைமையிலான போலீசாருக்கு மாவட்ட(SP) மணிவண்ணன் நற்சான்று வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்

Check Also

எளியோருக்கு நேரில் உதவிய PPFA. .

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் …