ஸ்டாலின் போட்டியிட தயாரா…? ஜெயகுமார் சவால்…

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், இராயபுரம் தொகுதியில் அஇஅதிமுக- பிஜேபி கூட்டணி சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயகுமார் 7 வது முறையாக களம் காண்கிறார்.

இதனையொட்டி, கூட்டணி கட்சிகளை சந்தித்த வகையில் இராயபுரத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் (கி) திரு கிருஷ்ணகுமார், வட சென்னை மாவட்ட (கி) பொதுச் செயலாளர் திரு வன்னியராஜன் ஆகியோர் வெற்றி வேட்பாளர் திரு டி. ஜெயகுமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

இங்கு பேசிய வேட்பாளர் திரு டி. ஜெயகுமார் அவர்கள், 7 வது முறையாக இராயபுரம் தொகுதியில் நிற்கின்றேன். தைரியம், திராணி இருந்தால் ஸ்டாலின் இத் தொகுதியில் என்னை எதிர்த்து நின்று ஜெயித்து காட்டட்டுமே. அவரால் முடியுமா… நான் தயார் என சவால் விட்டுள்ளார்.


இராயபுரத்தின் செல்லப் பிள்ளையாக மக்களோடு மக்களாய் பழகி, எளிய மனிதராய் வலம் வந்துக் கொண்டிருக்கும் உங்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க முடியும் என கூட்டணி கட்சியினர், குறிப்பாக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் உறுதியளித்துள்ளது குறிப்பிடதக்கது.


படங்கள், செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்”
Ln B.செல்வம்

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …