✒️✒️✒️✒️✒️தொடர் சர்ச்சையில் திமுக‌.‌..

தமிழக தேர்தல் களம் சூடு பறக்கின்ற வேளையில் நாகரிகம் இல்லாமல் பேசுவதில் திமுகவினர் கைவிட போவதில்லை என தெரிகிறது.


ஏற்கனவே உதய், லியோனி, ராசா வரிசையில் இப்போது பொறுப்புள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியும் தன் பேச்சில் சுவராசியம் இருப்பதாக எண்ணி பேசியது தான் திமுகவுக்கு ” ஆப்பு” வைக்குமோ என உடன்பிறப்புகளின் கவலை.
ஏதோ ராஜேந்திர பாலாஜி சொன்னதை தான் சொன்னதாக தயாநிதி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர், ஜெயலலிதா தாய் போன்றவர் மோடி தந்தைக்கு நிகரானவர் என்று மரியாதையாக தான் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தயாவோ இதனை திரித்து அந்த வார்த்தைகளை அசிங்கப்படுத்தியுள்ளார் என்பது தான். இதில் உச்சகட்டம் என்னவெனில் கருத்து கணிப்பில் திமுக ஆட்சி அமைக்கும் என்கிற நிலையில் பொறுப்பானவர்களின் பேச்சினால் இதற்கு வேட்டு வைத்திடுமே என ஸ்டாலினே அதிர்ச்சி அடைந்துள்ளார். இதற்கு அவர்களை கூப்பிட்டு தண்டிக்கலாமே என திமுகவினரே ஆதங்கப்பட்டு வர இதனை சரி செய்யாமல் இருந்தால் நமது உழைப்பும் வீணாகிவிடும் போல என் புலம்புகின்றனர்.
செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்” Ln Bசெல்வம்

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …