️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…

தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி போனது. கட்டுமானம், ஓட்டல், நெசவு தொழில் என பல்வேறு தொழில்களில் இவர்களது வருகை ம‌ற்று‌ம் ஆதிக்கம் அதிக அளவில் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.
அன்றாட தினசரிகளில் வருகின்ற செய்திகளிலும் இவர்களுக்குள்ளே மோதல், கொலை, துணிந்து கொள்ளை என தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் இவர்களுக்கான ஊதியம் குறைவாக தரப்படுவதும் மொத்தமாக ஒரு குழுவாக ஒரு இடத்தில் தங்கி வேலை பார்ப்பது ம்தான்.

சென்னை மெட்ரோ பணியில் இவர்கள் ஆதிக்கம் என்றால் தென்னக ரயில்வேயில் உள்ள பணிகள், வங்கிகளிலும் இவர்களது ஆக்கிரமிப்பு அதிகமாக வருகிறது. சமீபத்தில் மாநகர பேருந்தில் வட இந்திய கூட்டம் முன் பக்கமாக ஆறு, பின்பக்மாக ஆறு என ஏறியது. நடத்துனர் டிக்கெட் கேட்க அதிலிருந்தவன் முன்னாடி என சைகை காட்ட முன்னால் ஏறியவர்களிடம் கேட்ட போது பின்னாடி என சைகை காட்டவும் டென்ஷன் ஆன நடத்துனர், “ஒழுங்கா டிக்கெட் எடுக்கலை. இறக்கி விட்டுவிடுவேன்” என சவுண்ட் விட்டதும் சைலண்டாக அத்தனை பேருக்கும் டிக்கெட் எடுத்தனர்.
இது மட்டுமல்லாது தாங்கள் வசிக்கின்ற பகுதியில் நடமாடிடும் பெண்களை காமக் கண்ணோட்டத்துடன் வெறித்து பார்த்து வருவதும் அன்றாட நிகழ்வாகி வருகிறது.

கடந்த வருடம் கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கிற்கு தங்கள் சொந்த மாநிலம் சென்றவர்கள் மீண்டும் தமிழகம் வந்து விட்டனர். இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவர்களை பற்றிய தகவல்களை ஆரம்பக் கட்டத்திலேயே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நமது “ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழில்” வெளியிட்டு எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

இவர்களது வருகை என்பது, ரேஷன் அட்டை, ஆதார், வாக்காளர் அட்டை என தமிழகத்தில் இருக்கும் முகவரி (இவர்களுக்கு தாங்கள் வசிக்கின்ற மாநிலத்திலும் அடையாள அட்டை உண்டு என்பது வேறு… ) என ஆழமாக அமர்ந்திருப்பதை பார்க்கின்ற போது இவர்களது ஆதிக்கமே தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே மத்திய அரசின் தாரக மந்திரமாகியுள்ளது.

இந்த நிலைக்கு மாநில அரசு எந்தவித நடவடிக்கையு‌ம் எடுக்காத நிலையில், நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகளால் கிடைத்திடும் ஆட்சி மாற்றம் ஒன்று தான் தமிழனுக்கு ஒரு புதிய விடியல் ஆக இருக்க முடியும்.

“வந்தாரை வாழ வைத்திடும் தமிழகம்” என்கிற சொல்லுக்கும் இதில் தன் வாழ்வினை அர்ப்பணித்து வாழ்ந்திடும் தமிழனும் தலை நிமிர்ந்து வாழ முடியும். அந்த நாள் விரைவில் தமிழக மக்கள் மூலமாக தீர்வு கிடைத்திடும் என நம்புவோம்.

செய்தியாக்கம்
“ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …