எம்.எம்.கல்பர்கி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்தில் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது கொலைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி, ஓம்பிரகாஷ் கூறுகையில், தார்வார், துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது என்றார்.

இந்நிலையில் எம்.எம்.கல்பர்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.

Check Also

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் நியாயமற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். …