144 தடை உத்தரவை பயன்படுத்தி ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:

தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது.

ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் விதித்துள்ள 144 தடை உத்தரவு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக உள்ளது.

காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக நடப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் திமுக வினரே நேரடியாக பணப்பட்டுவாடை தடுப்போம் எனக் கூறினார். இந்த விவகாரங்கள் குறித்து உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று ஸ்டாலின் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *