2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தேர்வு

பிரேசிலில் 2016 ம் ஆண்டு நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

லண்டனில் நடைபெறும் ஐரோப்பிய சாம்பியன் ஷிப் போட்டியில், ஸ்பெயின் அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

1980 ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய மகளிர் அணி ஒலிம்பி போட்டிக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் 35 ஆண்டுகளுக்கு பின்னர், ஒலிம்பிக் போட்டியில் மகளிர் அணி பங்கேற்கிறது. கடைசியாக, 1980ம் ஆண்டு நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி 4ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.