239 ஆண்டு பழைமை வாய்ந்த முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் விழா…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை பொதுச்செயலாளரும், அரிமா சங்கத்தின் வட்டார தலைவருமான திரு. MJF Ln N.சரவணன் அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி, இன்று 11.06.2021, வெள்ளிக்கிழமையன்று எளிய முறையில் கொண்டாடினார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள மணிக்கார் மற்றும் இராஜாவெங்கடகிரி முதியோர் அனாதை இல்லத்தில் ( துவங்கிய ஆண்டு 1782, சுமார் 239 ஆண்டு பழமை வாய்ந்த இல்லம்) அங்குள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டியினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான திரு. “நட்பின் மகுடம்” MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் வழங்கினார்.

இந்நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு MJF Ln Dr M.நாகராஜ், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. A.M. ரஷீத் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …