300 க்கும் மேற்பட்ட சட்ட விரோத மது பாட்டில்கள் பறிமுதல், சென்னை காவல்துறை அதிரடி…

சென்னை: 30.05.2020 சனிக்கிழமை மாலை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் திரு. A.K.விஸ்வநாதன் அவர்களது உத்தரவின்படி, சென்னை பெருநகர காவல்துறை காவல் ( மேற்கு மண்டலம்) இணை ஆணையர் திருமதி. விஜயகுமாரி அவர்களின் ஆணைக்கிணங்க, அம்பத்தூர் மாவட்டம், துணை ஆணையாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் மற்றும் உதவி ஆணையாளர் ‘ செம்பேடு” பாபு அவர்களின் ஆலோசனையின் பேரில் T16 நசரத்பேட்டை பார்டர் செக்போஸ்ட் பகுதியில் T5 திருவேற்காடு காவல்நிலையம் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு முருகேசன் அவர்கள் தம் குழுவினர், SSI பாஸ்கர், SI ராணி ஹெட்கான்ஸ்டபிள் குருவம்மாள், ஜவஹர், மகேஸ்வரி ஆகியோர் இணைந்து வாகன சோதனை ஈடுப்பட்டிருந்தனர்.

அப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்த வாகனத்தினை சோதனையிட்ட போது சுமார் 300 க்கும் மேற்பட்ட மதுபாட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கடத்தி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அதனை கொண்டு வந்த இளைஞர்களையும் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் நேரிடியாக களத்தில் இறங்கிய ஆய்வாளர் திரு முருகேசன் குழுவினரை உயர் காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …