“அம்மா உப்பு” நாளை முதல் விற்பனைக்கு வருகிறது

அம்மா உப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் மலிவு விலையிலான அம்மா உப்பு நாளை முதல் விற்பனைக்கு வருகிறது.

இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.

முதல் வகை உப்பு ரூ.14க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.22க்கு விற்கப்படுகிறது), 2–வது வகை உப்பு ரூ.10–க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.16), 3–வது வகை உப்பு ரூ. 21–க்கும் (வெளி மார்க்கெட் விலை ரூ.25) விற்பனை செய்யப்படுகிறது.

இந்த 3 வகை உப்புகளை தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

அமுதம் சிறப்பங்காடி, சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மற்றும் கூட்டுறவு துறை ரேஷன் கடைகளில் இந்த மலிவு விலை உப்பு வகைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …

Leave a Reply

Your email address will not be published.