ஏ.ஆர் ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அமெரிக்கா பல்கலைகழகம்

இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைப்பள்ளியான பெர்க்லீ, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பெர்க்லீ இசைப்பள்ளி வழங்கும் விருதினைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மேலும் வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக எனது பெயரில் உதவித் தொகை வழங்கவுள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்’ என்றார்.

பாஸ்டன் நகரில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவின்போது ஏ.ஆர். ரகுமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது இசையமைப்பில் உருவான பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து பெர்க்லீ இசைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியை ஏ.ஆர். ரகுமான் தலைமையேற்று நடத்தவுள்ளார்.

Check Also

புது முயற்சி! “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இன்றைய இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டவரும் அவரது ரசிகர்களால் ” தளபதி” என …

Leave a Reply

Your email address will not be published.