ஆன்மீகம்

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்து வைணவதலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன. நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவ வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. …

மேலும் படிக்க

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம். நாள்: 31-08-2014

மேலும் படிக்க

திருப்போரூர் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை விரத வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, 2012-இல் பாலாலயம் செய்யப்பட்டு சன்னிதிகள் மூடப்பட்டு உற்சவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதனையடுத்து கும்பாபிஷேகம் நடந்து முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை …

மேலும் படிக்க

விநாயக சதுர்த்தி: தமிழர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வெள்ளிக்கிழமை (?29-08-2014) அன்று தமிழகம் முழுவதும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் …

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோவிலில்இன்று தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக.25) நடைபெறுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ஆவணித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை, சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலாவும், சனிக்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியும் சுவாமிகள் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த …

மேலும் படிக்க

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி திருக்கோயிலைச் சுற்றி வலம்வந்து கொடி மரத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு பூஜை நடைபெற்றது. கொடி மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அங்குசத் தேவருக்கு சிறப்பு கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர், பால், தயிர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. …

மேலும் படிக்க

வரம் தரும் வரலட்சுமி நோன்பு!

வரலட்சுமி நோன்பு– திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், கன்னிப்பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் கிடைக்க வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். இந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆடி மாதம் பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் இந்த விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது சிறப்பான பலன்களைத் தந்தருளும். இந்த வரலட்சுமி நோன்பு தினத்தில்தான், பாற்கடலில் இருந்து மாலை வேளையில் …

மேலும் படிக்க

புதுத்தாலி மாற்றுவது ஏன்?

சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்தால் கணவன் நீண்ட நாள் வாழ்வார் என்பது நம்பிக்கை, கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வார்கள். நல்ல வரன் …

மேலும் படிக்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். வெள்ளிக் கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது. வீதிவலம் வந்த 5 தேர்கள்: ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூன்.25 தேதி கொடியேற்றத்துடன் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. …

மேலும் படிக்க

மண்ணூர்பேட்டை மசூதியில் ரமலான் நோன்பு, சஹர் உணவிற்காக சிரமப்படும் வெளியூர் மக்களுக்கு இலவச சஹர் உணவு)

சென்னை, அம்பத்தூர் எஸ்டேட், மண்ணூர்பேட்டை நூருல் ஹுதா ஜும்மா மசூதியில் சஹர் உணவிற்காக சிரமப்படும், குறிப்பாக வெளியூர் மக்களுக்கு இலவச சஹர்(அதிகாலை உணவு) சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இந்தியா முழுவதிலிமிருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் அதிகமானோர் இரவுப்பணிகளிலும், சமைக்க இயலாத நிலையிலும் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாத நோன்பு நோற்பதற்கான சஹர் உணவுக்கு மிகவும் …

மேலும் படிக்க