உலகம்

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பா?

காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதறல் துண்டுகள் என்று கூறி சீன அரசின் இணையதளத்தில் (Chinese State Administration of Science, Technology and Industry for National Defense)  மூன்று செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கிளம்பிய விமானம் சீன கடற்பகுதியில் காணாமல் போனது. அந்த விமானம் கடலில் விழுந்ததா, கடத்தப்பட்டதா என்று ஒரு விவரமும் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் …

மேலும் படிக்க

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் இந்தியா உதவ முன்வந்துள்ளது.

239 பயணிகளோடு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணிக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுடன் பயணித்த இந்த போயிங் 777-200 இஆர் ரகத்தை சேர்ந்த விமானம், வியாட்நாம் நாட்டின் தெற்கு பகுதியில் பயணப் பாதையில் இருந்து திடிரென காணாமல் போனது. திடீரென மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் பன்னாட்டு குழுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் சூழலில், விமானம் குறித்த …

மேலும் படிக்க

சானல் 4 தொலைக்காட்சியின் புதிய வீடியோ – இலங்கை இராணுவத்தின் அட்டூழியம்

”இலங்கைப் போரில் அருவருக்கத்தக்க மீறல்களுக்கான புதிய வீடியோ ஆதாரம்” என்னும் தலைபில் சானல் 4 தொலைக்காட்சி நேற்று ஞாயிறன்று வீடியோ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. கலம் மக்ரே அவர்களால் தயாரிக்கப்பட்ட, அந்த குறிப்புக்கான வீடியோ ஆதாரத்தை பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கியிருந்ததாக அந்தத் தொலைகாட்சி கூறியிருந்தது. பெண்  விடுதலைப்புலிகள் என்று நம்பப்படுபவர்களின் உடல்களை நோக்கி இலங்கை இராணுவத்தினர் சிலர் மிகவும் மோசமான செயல்களை செய்வதாகக் கூறி, சில காட்சிகளைக் …

மேலும் படிக்க

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ஐநா எச்சரிக்கை

புவியில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப் பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது …

மேலும் படிக்க

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏற்படும்: ஒபாமா எச்சரிக்கை

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏறபடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷியாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைநகர் கீவ்வில் பல மாதங்களாக போராட்டம் நடந்து இறுதியில் கடந்த சனிக்கிழமை புரட்சி வெடித்தது. அதிபர் விக்டரின் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரத்தில் பதவி இழந்த விக்டர் தப்பி தலைமறைவாகி விட்டார். இவர் ரஷியாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ஆகவே …

மேலும் படிக்க

ஜப்பானில் வியப்பளிக்கும் பாலம்

ஜப்பான் நாட்டில் வணிக விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகியுள்ளதால், ஈஜிமா எனும் பாலம் அண்மையில் புகழ்பெற்றது. மட்சுயே ஷி நகரையும் சாகாய்மினாடோ ஷி நகரையும் இணைக்கும் இந்த பாலம் 1446 மீட்டர் நீளமும் சுமார் 44 மீட்டர் உயரமும் உடையது. இந்த பாலத்தின் சாய்வு 6.1விழுக்காடு. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் பிறகு சுமார் 6 மீ்ட்டர் ஏற்றமிருக்கும் வகையில், இந்த பாலத்தை கட்டியிருப்பது குறிப்பிடத்தகு. ஜப்பான் நாட்டில் வணிக விளம்பரம் ஒன்று …

மேலும் படிக்க