இந்தியா

ஒடிசா அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழப்பு

ஒடிசா மாநில தலைநகர் கட்டாக்கில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில், நேற்று ஒரே நாளில் 7 குழந்தைகள் உயிரிழந்தன. இதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த உறவினர்கள், குழந்தைகள் சிகிச்சை மைய வளாகத்தை பூட்டி, நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என தற்போது …

மேலும் படிக்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்

ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை சரியாக 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-வது கிரையோஜெனிக் என்ஜினுடன் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 2,117 கிலோ எடையுள்ள ஜிசாட்-6 செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றுடன் …

மேலும் படிக்க

ஸ்மார்ட் நகரங்களின் பட்டியல், தமிழ்நாட்டில் 12 நகரங்கள்

ஸ்மார்ட் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் இன்று வெளியிட்டார். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் நகரம் திட்டம் அமைந்துள்ளது. மொத்தம் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் காஷ்மீரில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரங்களின் பெயர்களை அறிவிப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் 98 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை …

மேலும் படிக்க

இந்திய மக்கள் தொகையில் 79.8% இந்துக்கள்; 14.2% முஸ்லிம்கள்

இந்திய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் அதிகபட்சமாக இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24.6 சதவீதமும் இந்துக்களின் மக்கள்தொகை 16.8 சதவீதமும் வளர்ச்சிகண்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களின் படி இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர். இருந்தபோதும் இந்துக்களின் மக்கள்தொகை முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.7 சகவிகிதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை …

மேலும் படிக்க

இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி

இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி ஆகும். இதில் இந்துக்கள் 96.63 கோடி( 79.8 %), முஸ்லீம்கள் 17.22 கோடி ( 14.2 %), கிறித்தவர்கள் 2.3 கோடி (2.78 %), சீக்கியர்கள் 2.08 கோடி, ஜென மதத்தினர் – 45 லட்சம், பவுத்தவர்கள் – 84 லட்சம் ஆகும். இந்த புள்ளி விபரங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 80 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களும், “ரீபண்ட்” கோருபவர்களும் ஆன்லைனில்தான் வருமான வரி …

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக எம்.பிக்கள் சந்திப்பு

பிரதமர் மோடியை டெல்லியில் இன்று அதிமுக எம்.பிக்கள் 48 பேர் நேரில் சந்தித்து என்.எல்.சி தொழிலாளர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தனர். ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி  கடந்த மாதம் 20ந்தேதி முதல் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையில்  நேரடியாக தலையிட்டு தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் …

மேலும் படிக்க

கொச்சியில் உலகின் முதலாவது சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையம் திறப்பு

உலகிலேயே சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் செயல்படும் விமான நிலையத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று திறந்து வைத்தார். கொச்சி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான நிலைய நிறுவனம் முதற்கட்டமாக கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார …

மேலும் படிக்க

இந்தியாவில் இந்தியரை அவமானப்படுத்திய இஸ்ரேல் காப்பி கடை

இமாசலப் பிரதேசம் கசோலில் இந்தியப் பெண் ஒருவர் இஸ்ரேலிய காபி ஷாப் ஒன்றில் உணவு தராமல் நிராகரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி பரபரப்பாக பரவி வருகின்றது. கசோலில் அமைந்துள்ள மிகப் பிரபலமான இஸ்ரேலிய காபி ஷாப்பில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காபி ஷாப் பெரும்பாலும், இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத்தான் என்றும், இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அக்கடையினைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். ஸ்டீபன் கயே என்கின்ற டெல்லியினைச் சேர்ந்த …

மேலும் படிக்க

உச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது உச்ச நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க