தமிழகம்

பிரபல ரவுடியின் அருகில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம், பாதுகாவலர்கள் எங்கே? அதிர்ச்சி படம்

பிரபல ரவுடியின் அருகில் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அருகில் பிரபல ரவுடி இருப்பது போன்ற ஒரு படம் இணையதளங்களில் உலா வருகிறது. இது பற்றி ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், வரிச்சூர் செல்வத்தின் மீது பல்வேறு கொலை, ஆட்கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன, பலமுறை சிறை சென்ற இந்த ரவுடி மீது ஒரு முறை போலிஸ் என்கவுண்டர் …

மேலும் படிக்க

போலி கேஸ் ஏஜன்சி ஊழியர்கள் – பொதுமக்கள் உஷார்

சமீபகாலமாக சில கம்பெனிகளின் பெயர் பொறித்த சீருடையில் வரும் மர்ம நபர்கள் கேஸ் சிலிண்டர்களை திருடி சென்றுவிடுகின்றனர். ‘கம்பெனியில் இருந்து வருகிறோம். கேஸ் கசிவு உள்ளதா என செக் செய்ய வேண்டும்” என்கின்றனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பரிசோதித்துவிட்டு, சிலிண்டரில் லீக்கேஜ் உள்ளது. கம்பெனிக்கு எடுத்து சென்று சரி செய்து தருகிறோம் என கூறி, கேஸ் உள்ள சிலிண்டரை கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால், திரும்பி வருவதில்லை. சந்தேகப்பட்டு விசாரித்தால், …

மேலும் படிக்க

இலங்கை அரசுக்கு எதிராக டியுஜே சார்பாக பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

இலங்கை வெளியுறவு துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் தவறாக சித்தரித்து படம், செய்தி  வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) சார்பில் அதன் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமையில், சென்னை காமராஜர் சாலை, பீச் ரோடு, உழைப்பாளர் சிலை முன்பு 01.08.2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பும் நடைபெற்றது.

மேலும் படிக்க

“ஜீனியஸ் விருது” வழங்கும் விழா மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” ஐந்தாம் ஆண்டு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன், ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழ் இணைந்து நடத்தும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விழங்கும் சாதனையாளர்களுக்கு இவ்வாண்டிற்கான “ஜீனியஸ் விருது” வழங்கும் விழா மற்றும் ஐந்தாம் ஆண்டு விழா வரும் சனிக்கிழமை (26-07-2014) பகல் 2 மணியளவில், சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்கும்மாறு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம். இவண்,  

மேலும் படிக்க

போரூர் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 61, தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்கள்

போரூர் கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்களாக மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28–ந் தேதி நடைபெற்ற கோர கட்டிட விபத்தில் நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்ற மீட்பு பணிகளில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடனும், 50 பேர் பிணங்களாகவும் …

மேலும் படிக்க

மவுலிவாக்கம் கட்டிட விபத்து பலி 58 ஆக அதிகரிப்பு: விசாரணைக் குழு அமைத்து முதல்வர் உத்தரவு

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது. கடந்த 28-ம் தேதி மாலை மவுலிவாக்கத்தில் 11 அடுக்க மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து 6-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. …

மேலும் படிக்க

மண்ணூர்பேட்டை மசூதியில் ரமலான் நோன்பு, சஹர் உணவிற்காக சிரமப்படும் வெளியூர் மக்களுக்கு இலவச சஹர் உணவு)

சென்னை, அம்பத்தூர் எஸ்டேட், மண்ணூர்பேட்டை நூருல் ஹுதா ஜும்மா மசூதியில் சஹர் உணவிற்காக சிரமப்படும், குறிப்பாக வெளியூர் மக்களுக்கு இலவச சஹர்(அதிகாலை உணவு) சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இந்தியா முழுவதிலிமிருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் அதிகமானோர் இரவுப்பணிகளிலும், சமைக்க இயலாத நிலையிலும் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாத நோன்பு நோற்பதற்கான சஹர் உணவுக்கு மிகவும் …

மேலும் படிக்க

சென்னை, மாதவரத்தில், PPFA, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செய்தியால் சரி செய்யப்பட்ட குடிநீர் குழாய்

சென்னை மாதவரம், குமரன் தெரு விரிவு, பகுதி 7, மண்டலம் 9 , கதவிலக்க எண் 96 எதிரில் அமைந்துள்ள குடிநீர் குழாய் கடந்த ஒருமாத காலமாக பழுதுபட்டு குடிநீர் முறையாக கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் (PPFA) மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் கவனத்திற்கு கொண்டு வர, நாம் முறையாக சென்னை மாமன்ற 28 வது வார்டு உறுப்பினர் திரு E. சந்திரசேகர் …

மேலும் படிக்க

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுடைய நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க …

மேலும் படிக்க

நாளை முதல் புதிய ரயில் கட்டணம் அமல்.

மத்திய அரசு அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி …

மேலும் படிக்க