செய்திகள்

தெனாலிராமன் படம் சம்பந்தமாக வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில தெலுங்கு அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே …

மேலும் படிக்க

இந்த தேர்தல் தனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம் – திமுக தலைவர் கருணாநிதியின் உருக்கமான பேச்சு

கோவையில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கூறிய கருணாநிதி, கடுமையான எதிர்ப்பு இருந்தால் மோடி மட்டுமல்ல யாரும் இங்கு நுழையமுடியாது என்று அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சி என்ற பெயரில் ஜெயலலிதாவும் ஏமாற்றுவதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இளைஞர்கள் உறுதியுடன் இருந்தால் இந்திமொழி இங்கு நுழையமுடியாது என கூறிய அவர் தமிழர்களின் பண்பாட்டை காக்க உயிரை கொடுத்து உழைப்போம் …

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கன்னியாகுமரி வேட்பாளர் உதயகுமாரின் மனைவி திடீர் வேட்பு மனு தாக்கல்!

கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் பிரசாரத்திலும் இறங்கியுள்ளார். இந்த நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வந்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். மீரா உதயகுமார் மனு தாக்கல் செய்தது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு வேளை …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவரும் சீனக் கப்பலுக்கு சிக்னல் கிடைத்தது?

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடி வரும் தனது கப்பல்களில் ஒன்று விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போல ஒன்றை கேட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கறுப்பு பெட்டியை தேடும் உபகரணம் பொருத்தப்பட்ட கப்பலானது விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போன்றவற்றை கேட்டிருந்தாலும் அதனை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குறைவான நேரத்துக்கு மட்டுமே இந்த சமிஞ்சை கேட்டதாகவும், இந்த சமிக்ஞை காணாமல் …

மேலும் படிக்க

ஒரு புயல் வந்து கொண்டிருக்கிறது (A Storm is Coming) – ஆம் ஆத்மி பார்ட்டி

A Storm is Coming , புரட்சி ஆரம்ம்பித்துவிட்டது என்ற பெயரில் ஆம் ஆத்மி பார்ட்டி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொகுப்பு

மேலும் படிக்க

அனைத்து தியேட்டர்களில் இருந்தும் இனம் படம் நிறுத்தம் – லிங்குசாமி

நாளை முதல் இனம் படம் அனைத்து திரையரங்குகளிலுல் இருந்தும் நிறுத்தப்பட உள்ளது. படத்தின் தயாரித்த நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ். அதன் உரிமையாளர் லிங்குசாமி பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

குஜராத் அரசு இரட்டை வேடம் போடுகிறதா? காஸ் (Gas) விலையை உயர்த்த கோரி எழுதிய கடிதம் – ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட,  காஸ்(Gas) விலையை உயர்த்தக் கோரி குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ஃப்ரேஷன் லிமிட்டெட் (Gujarat State Petroleum Corporation Limited) எழுதிய கடிதத்தின் நகல். இது பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பிய போது எவரும் பொருத்தமான பதிலை தரவில்லை என்பது அக்கட்சியின் கூற்று.

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் – ராஜபக்சே உத்தரவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக அதிபர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சிறைகளில் 98 தமிழக மீனவர்கள் இருப்பதாக, அந்நாட்டு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நேற்று, இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை …

மேலும் படிக்க

மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்: இம்ரான் மசூத், காங்கிரஸ் வேட்பாளர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு கூட்டத்தில் அவர் பேசிய போது, நான் தெருவில் உள்ளவன், என் மக்களுக்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். நான் சாவைக் கண்டு என்றும் பயந்ததில்லை. மோடி இந்த மாநிலத்தை குஜராத்தாக கருதுகிறார். குஜராத்தில் 4 சதவிகித …

மேலும் படிக்க

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் லில் விளையாட தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின்போது இந்த இரு அணிகளும்தான் ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கின. இந்த விவகாரத்தில் இரு அணிகள் மீதும் கடுமையான புகார்கள் உள்ள காரணத்தால் அவர்களை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் கவாஸ்கர் போன்ற அனுபவமிக்க ஒருவரை …

மேலும் படிக்க