விளையாட்டு

லலித் மோடி செய்த சதியால் சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு தடை: வைகோ கண்டனம்

லலித் மோடியின் சதி திட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகளால், ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் பிசிசிஐ முன்னாள் தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதித்திட்டம் வகுத்ததாக செய்திகள் வெளியாகின. …

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவு செப்டம்பர் மாதத்தில் உறுதியாக எடுக்கப்பட்டு விடும் என்று அனுராக் தாக்கூர் உறுதி தெரிவித்தார். அதாவது தென் ஆப்பிரிக்க அணியின் நீண்ட தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் குறித்த முடிவெடுக்கப்படும் என்றார் அனுராக் தாக்கூர். இது குறித்து …

மேலும் படிக்க

253 கோல்களுடன் லா லீகாவில் மெஸ்ஸி புதிய சாதனை

ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் லா லீகா (பிரதான லீக்) கால்பந்தாட்டப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனைக்கு பார்ஸிலோனா கிளப்பைச் சேர்ந்த ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸ்ஸி சொந்தக்காரராகியுள்ளார். செவில் அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற லா லீகா கால்பந்தாட்டப் போட்டியில் லயனல் மெஸ்ஸி போட்ட 3 கோல்களின் உதவியுடன் பார்ஸிலோனா 5 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் லா லீகா கால்பந்தாட்டப் போட்டிகளில் தனது …

மேலும் படிக்க

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி முதலிடம் பிடித்தது

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. இந்திய அணிக்கு முதலிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை–இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடருக்கு முன்பு …

மேலும் படிக்க

இலங்கையை துவம்சம் செய்த ரோஹித் சர்மாவுக்கு கருணாநிதி பாராட்டு

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைகளைப் படைத்தார். ரோஹித் சர்மாவுக்கு திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி பாராட்டு …

மேலும் படிக்க

உலக சாதனை: இமாலய சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2-வது முறையாக இரட்டைச் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சேவாக் வசம் இருந்த உலக சாதனையையும் முறியடித்துள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய அவர், தனது …

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப் 3வது சுற்று இன்று துவக்கம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-ஆவது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்தும், நார்வேயைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸெனும் மோதுகின்றனர். முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில், 2-ஆவது சுற்றில் கார்ல்ஸென் வெற்றி பெற்றார். இதனால் 1.5 புள்ளிகளுடன் கார்ல்ஸென் முன்னிலையில் உள்ளார். இதை தொடர்ந்து இன்று 3-ஆவது சுற்று நடைபெறுகிறது.

மேலும் படிக்க

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை-கொல்கத்தா ஆட்டம் டிரா

கொல்கத்தாவுக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கடைசி நிமிட பெனால்டி வாய்ப்பு கோலால் சென்னை அணி தோல்வியில் இருந்து தப்பித்து ‘டிரா’ செய்தது. 8 அணிகள் இடையிலான இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் …

மேலும் படிக்க

டெண்டுல்கர் புகார், கிரேக் சேப்பல் மறுப்பு

ராகுல் திராவிடுக்கு பதிலாகத் தன்னை கேப்டனாக இருக்குமாறு 2007 உலகக் கோப்பை போட்டிக்கு முன் அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கேட்டுக் கொண்டார் என்று டெண்டுல்கர் தெரிவித்த கருத்துக்கு சேப்பல் மறுப்பு தெரிவித்துள்ளார். “பிளேயிங் இட் மை வே’ என்ற சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைப் புத்தகம் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. 2005 முதல் 2007 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல் குறித்து அதில் …

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் பீல்டிங் அமைப்பினால் சர்ச்சை

அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை …

மேலும் படிக்க