முக்கியசெய்திகள்

ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில், சுமார் 3 ,300 ஏக்கர் – கோர்ட்டில் அரசு வக்கீல் பவானி சிங்

தற்போது நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான  சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில்,   சுமார் 3 ,300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளனர் என்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் பவானிசிங் கூறினார். முன்பு முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா, சொத்துக் குவித்ததாக தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஒரு வார காலமாக …

மேலும் படிக்க

இலங்கை மீதான அமெரிக்கா கொண்டு வந்த ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக  அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்  ஜநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் …

மேலும் படிக்க

மத்திய மந்திரியை செருப்பால் அடியுங்கள் என்று கூறிய அதிமுக வேட்பாளர் மீது புகார்

தேர்தல் வாக்கு கேட்டு உங்கள் தொகுதிக்கு ப. சிதம்பரம் வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் தெரிவித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2014ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவர் மானாமதுரை அருகே  நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வந்தால் …

மேலும் படிக்க

தாய்லாந்து சாட்டிலைட் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களை கண்டுபிடித்தது?

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் 300 பாகங்களை தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த சாட்டிலைட் படம் தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட்டில் இருந்து மார்ச் 24 ம் தேதி படம் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு நாள் முன்புதான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 122 பொருட்களை பிரெஞ்ச் சாட்டிலைட்  படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த 300 பொருட்களும் தென்மேற்கு பெர்த்திலிருந்து சுமார் 2700 கி.மி தொலைவில் இருப்பதாக …

மேலும் படிக்க

ஐ.பி.எல்.பிக்ஸிங் – சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை நீக்குங்கள் – சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

மாட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வரும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் தடை மற்றும் சீனிவாசனுக்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய இடைக்கால தலைவரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அதிரடி பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல். …

மேலும் படிக்க

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று புது தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் * 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை 3 வருடங்களில் எட்ட சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் * இந்தியர்கள் அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமையாக்கப்படும் * இந்தியர்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் * தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட …

மேலும் படிக்க

செயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்கள்: மலேசிய மந்திரி

காணாமல் போய் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370. ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 1588 மைல் தொலைவில், பிரெஞ்ச் செயற்கைகோள் படத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் 122 பொருட்கள் கடலில் மிதப்பதாகவும் அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஸ்கமுதின் உசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மாயமான விமானத்தில் பயணம் …

மேலும் படிக்க

மு.க. அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் – கருணாநிதி

திமுகவின் கொள்கைகளுக்கு விரோதமான முறையில் செயல்பட்ட மு.க. அழகிரி சில நாட்களுக்கு முன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரிடம் விளக்கமும் கோரப்பட்டது. ஆனால் எந்த வித விளக்கமும் தராமல் கட்சி தலைமையை மீண்டும் விமர்சித்ததால் மு.க. அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க