ஆஃப்கானிஸ்தானில் கைதிகளை விடுதலை செய்த தலிபான் தீவிரவாதிகள்

ஆஃப்கானிஸ்தானில் காஸ்னி சிறையில் காவலர்களைக் கொன்றுவிட்டு சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை ராணுவ உடையில் வந்த தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளனர்.

ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி மாகாணத்தின் முக்கியச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர்.

சிறைக்காவலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள், அங்கு அடைக்கப்பட்டிருந்த 352 கைதிகளை தப்பவைத்தனர்.

இந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Check Also

ஒரிசாவில் தமிழ் பொறியாளர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

ஒடிசாவில் பணியாற்றி வந்த மதுரையைச் சேர்ந்த உதவி பொறியாளர் ஒருவர் இரும்புக்கம்பியால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை ஐயர் பங்களா பகுதியைச் …