லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை இராயபுரம் ஹெரிடேஜ் புதிய நிர்வாகிகள் தேர்வு…

2020-2021 ஆம் ஆண்டிற்கான லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை இராயபுரம் ஹெரிடேஜ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை கோயம்பேட்டில் சிம்சன் ஹோட்டலில் அரசு வழிக்காட்டுதலின்படி, சமூக இடைவெளி, முக கவசம் அணிந்த நிலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், திரு. PMJF Ln Dr N.R. தனபாலன் ( Past Dist.Governor) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். திரு. MJF Ln R. சம்பத் (International Director) அவர்கள் விருந்தினர்களை கெளரவித்தார்.

2020-2021 ஆண்டில் புதிய நிர்வாகிகளாக தலைவராக திரு. Ln V.K. ராமசந்திரன், செயலாளராக Ln A.R. கோபிநாத், பொருளாளராக Ln R. தமிழ் அழகன் பதவியேற்றுக் கொண்டனர்.

இவ் விழாவில், திருமதி MJF Ln S.P. பாக்கியலட்சுமி ( I VDG) திரு. MJF Ln E. விஜயகுமார், ( Cabinet Secretary) , Ln நளினா குமாரி S. மூர்த்தி ( Region Chair Person) ஆகியோர் கலந்துக் கொள்ள கடந்த 2019-2020 ஆண்டில் நிர்வாகிகளான திரு. சண்முகம், திரு. சஞசீவி, திரு. கோபிநாத் ஆகியோர் புதிய நிர்வாகிகளிடம் பொறுப்பினை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து பொறியியல் படித்து வரும் மாணவருக்கு இந்த 2020-2021 ஆண்டிற்கான கல்வி ஊக்கத் தொகை ரூ. 25,000/- ஐ திரு. Ln .T. தேவராஜ் வழங்கினார்.புதிய தலைவராக பொறுப்பேற்ற திரு. Ln V.K. ராமசந்திரன் Lions Diayalis Centre க்கு ரூ. 11,000 வழங்கினார்.
நிகழ்ச்சியில், திரு. Ln Dr K. மணிவண்ணன், திரு MJF Ln R. சத்யநாராயணமூர்த்தி, திரு. Ln T. ராமசந்திரன், திரு MJF Ln ” இளங்கோ” A. வீரப்பன், திரு. MJF Ln சரவணன், திரு. ” விஸ்வசக்தி” மனோகர், திரு.‌Ln T.S. பாலாஜி திரு. Ln A.G. அசோக்குமார் மற்றும் அரிமா நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்

சிறப்பு நிகழ்வாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln லி. பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான திரு. ” செயல் சிங்கம்” Ln C.பாலகிருஷ்ணன் ஆகியோர் கெளரவிக்கப்பட, புதிய அரிமா உறுப்பினராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான ” கிங்மேக்கர்” திரு B. செல்வம் அவர்கள் இணைத்துக் கொண்டார்.

செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

பழைய வண்ணாரப்பேட்டை காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள 96 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி …