மங்கள்யான் வெற்றி இந்தியர்கள் கொண்டாட வேண்டிய தருணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார்.

இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.

அப்போது,  இந்திய அணி கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் நாடே கொண்டாடுகிறது. ஆனால் இஸ்ரோ விஞ்ஞானிகளின்  இந்த சாதனை அதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது. இந்தியர்கள் அனைவருமே கொண்டாட வேண்டிய தருணம் இது.

வரலாறு படைக்கப்பட்டுள்ளது. கற்பனையிலும் நினைக்க முடியாத சில விஷயங்களை நமது விஞ்ஞானிகள் நிஜத்தில் செய்து நமது திறமையை நிரூபித்துள்ளனர். உலகத்துக்கே சவால் விடும் வகையில் நமது விஞ்ஞானிகள் செயல்பட்டுள்ளனர்.

இந்த தருணத்தில், இந்தியாவின் பல்வேறு பெருமைகளில் ஒன்றான உலகத்துக்கு ஸீரோவை அளித்தது, கிரகணங்களை துல்லியமாக கணித்தது, கிரகங்களின் நிலைகளை கண்டுபிடித்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை ஏற்படுத்தியவர்களை நினைவில் கொள்ள வேண்டும்.

modi_scientist

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அரிய சாதனையை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் எடுத்துக் கூற வேண்டும் என்று பேசினார்.

மோடி பேசியதாவது, இன்று நமது மாம் செவ்வாய் கிரகத்தை நேரில் சந்தித்துள்ளது மற்றும் செவ்வாய் கிரகமும் நமது மாம் (Mars Orbiter Mission) -ஐ பார்த்துள்ளது என்றார் மகிழ்ச்சியோடு.

மேலும், ஒரு போதும் நமது மாம் நம்மை ஏமாற்றாது என்றும் கூறினார்.

Check Also

பிரமிக்க வைத்த ஷேபா மாணவர்களின் அறிவியல் கண்காட்சி!

நம் பிள்ளைகளிடம் உள்ள அறிவியல் திறமையினை வெளிக் கொண்டு வரும் வகையில் புது வண்ணை ” ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *