ப்ளீஸ் – பாடாதே சிம்பு நிறுத்திடு – சௌந்தர்யா ரஜினிகாந்த்

விஜய் டி.வியின் ‘காபி வித் டி.டி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது, சிம்புவிடம் நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என செளந்தர்யாவிடம் கேட்டபோது, ‘சிம்பு, நீ பாடறதை நிறுத்திடேன்,” என்றார்.

அந்த நிகழ்ச்சி நேற்றிரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான உடன், செளந்தர்யாவின் ட்விட்டர் தளத்தில் சிம்பு ரசிகர்கள் அவருக்கு எதிரான கமெண்டுகளை பதிவு செய்தனர்.

soundarya-rajinikanth-hot

இச்செயல் குறித்து சிம்பு, “அனைவருக்குமே மற்றொருவரின் செயல் குறித்து விமர்சிக்க உரிமையுண்டு. ஆகையால், எனது ரசிகர்கள் இவ்வாறு செய்வது மிகவும் தவறு. மற்றவர்களையும் என்னை மதிப்பது போல மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதை ஆகியவற்றை நீங்கள் மற்றவரிகளிடமும் காட்ட வேண்டும், நன்றி. என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறினார்.

சிம்புவை குறித்து செளந்தர்யா, சிறுவயதில் இருந்தே எனக்கு சிம்பு நண்பர். நான் விளையாட்டுக்காகத்தான் அப்படி கூறினேன். எங்களுக்குள் எவ்வித சண்டையும் இல்லை என்று கூறியுள்ளார்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published.