வட சென்னை நாடார் பேரவை சார்பில் அரிசி மூட்டைகள், ஏழை மக்களுக்கு உதவி வரும் மக்கள் நல உதவி மையத்திடம் வழங்கப்பட்டது

மக்கள் நல உதவி மையம் மூலமாக கொரானா ஊரடங்கி‌‌னால் பாதிக்கப்பட்ட ஏராளமான எழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த உதவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் நாடார் பேரவை வடசென்னை சார்பாக அதன் தலைவர் மறறும் உறுப்பினர்கள் இன்று காலை மக்கள் நல உதவி மைய அலுவலகத்திற்கு வருகை தந்து ஏழை மக்களுக்கு அரிசி மூட்டைகளை தந்து உதவினர்.

இந் நிகழ்வில் மாவட்ட தலைவர் ஐயா திரு. கராத்தே ரவி, மாவட்ட செயலாளர் ஐயா திரு. சீனிவாசன், துணை செயலாளர் ஐயா திரு சந்தானம், ராயபுரம் பகுதி தலைவர் ஐயா திரு செல்வம், மற்றும் ஆர் கே நகர் பகுதி செயலாளர் ஐயா திரு தேறி அப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நல உதவி மையம் சார்பாக, வட சென்னை நாடார் பேரவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Check Also

பசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…

சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து …