Tag Archives: ஆம் ஆத்மி

பாஜகவினர் குதிரை பேரம் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது ஆம் ஆத்மி

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்காக எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலை பேசும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி. டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. கவர்னரும்  அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை அழைக்கலாம் என்று ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாரதிய ஜனதாவினர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலை பேசும் வீடியோக்களை இன்று ஆம் ஆத்மி அதிரடியாக வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மியின் …

மேலும் படிக்க

தாக்கியவரை நேரில் சந்தித்த கெஜ்ரிவால்.. மன்னிப்பு கேட்டார் அடித்த ஆட்டோ டிரைவர்

டெல்லி சுல்தாபுரில் பிரசாரம் செய்த போது லாலி என்ற ஆட்டோ டிரைவர் திடீரென கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்து விட்டார். லாலியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று லாலி வீட்டுக்குப் சென்ன்றார். பின்னர் லாலிக்கு அவர் மாலை அணிவித்து, அவரிடம் பேசினார். கன்னம் வீங்கிய நிலையில் காணப்பட்ட கெஜ்ரிவாலிடம் லாலி மிகவும் உருக்கமாகப் பேசி மன்னிப்பு கோரினார். லாலி கெஜ்ரிவாலை அடித்ததுமே அவரை ஆம் ஆத்மி கட்சியினர் …

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கன்னியாகுமரி வேட்பாளர் உதயகுமாரின் மனைவி திடீர் வேட்பு மனு தாக்கல்!

கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் பிரசாரத்திலும் இறங்கியுள்ளார். இந்த நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வந்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். மீரா உதயகுமார் மனு தாக்கல் செய்தது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு வேளை …

மேலும் படிக்க

குஜராத் அரசு இரட்டை வேடம் போடுகிறதா? காஸ் (Gas) விலையை உயர்த்த கோரி எழுதிய கடிதம் – ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட,  காஸ்(Gas) விலையை உயர்த்தக் கோரி குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ஃப்ரேஷன் லிமிட்டெட் (Gujarat State Petroleum Corporation Limited) எழுதிய கடிதத்தின் நகல். இது பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பிய போது எவரும் பொருத்தமான பதிலை தரவில்லை என்பது அக்கட்சியின் கூற்று.

மேலும் படிக்க

மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு சிறை: கேஜ்ரிவால் எச்சரிக்கை

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். மோடியிடம் இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களை ஜெயிலுக்கு அனுப்புவேன் …

மேலும் படிக்க

பத்திரிகையாளர் ஞாநி ஆம் ஆத்மி’யில் இணைகிறார் : சென்னையில் போட்டி?

மூத்த செய்தியாலரும் அரசியல் விமர்சகருமான ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார். அவர் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியில் நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இணைந்தனர். இந்நிலையில் எழுத்தாளர் ஞாநி , தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ‘தீவிர …

மேலும் படிக்க

ஆம் ஆத்மியின் தமிழக தலைவர் உதயகுமார்?

ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் இணைந்த கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை கட்சியின் மாநிலத் தலைவராக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விரைவில் இடிந்தகரைக்கு வரவுள்ள கெஜ்ரிவாலே இதை நேரடியாக அறிவிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார் மற்றும் அவர் போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோரும் ஆம் ஆத்மியில் இணைந்தனர். தமிழகத்தில் இந்தக் கட்சி …

மேலும் படிக்க

கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம் ரூபாய் 20,000 மட்டுமே!

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். முக்கிய நகரங்களுக்கு கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செல்வதால் ஆம்ஆத்மி கட்சிக்கு நிறைய பணம் செலவாகிறது. இதுவரை சேகரித்த பணத்தில் கணிசமான தொகை செலவாகி விட்டது. அடுத்து முக்கிய வேட்பாளர்களுக்கான செலவை கட்சியே ஏற்க வேண்டியதுள்ளது. தற்போது …

மேலும் படிக்க

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமா? உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஆசையா? உங்களுக்கு தகுதி இருந்தால் வாய்ப்பளிக்க முன் வருகிறது, தில்லி சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்ட ஆம் ஆத்மி கட்சி. நீங்கள் அவர்கள் இணையதளத்தில் (http://www.aamaadmiparty.org) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். தூய்மையான அரசியலை முன்னிறுத்தும் அவர்களோடு, தகுதியிருந்தால் நீங்களும் ஒருவராக போட்டியிடலாம். நமது நாட்டை மாற்றி அமைக்க எண்ணும் மக்கள் ஏன் மாற்றத்தை …

மேலும் படிக்க