Tag Archives: இந்தியா

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் 8 பேர் பட்டியல்

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில், வெளிநாட்டு வங்கிகளில், டாபர் இந்தியா’வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ …

மேலும் படிக்க

செய்தியாளர்களுக்கு பாராட்டு: பிரதமர் மோடி

தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறப்பான விழிப்புணர்வு கொடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தீபாவளிப் பண்டிகையை அடுத்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் பேசிய மோடி, பத்திரிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகங்களில் இருந்தும் தாம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் பத்திரிக்கையாளர் …

மேலும் படிக்க

ரஜினிக்கு சல்மான் கான் சவால்!

இந்திய பிரதமர் மோடி துவங்கி வைத்த ’தூய்மையான இந்தியா’ போட்டி நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு போட்டியாளர் குப்பைகள் நிறைந்த பகுதியை சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த நபரை போட்டிக்கு அழைத்து சவால் விடவேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாகும். இதன் அடிப்படையில் நரேந்திர மோடி, சல்மான் கான் உள்ளிட்ட பலரையும் போட்டிக்கு அழைத்தார். போட்டியை ஏற்றுக்கொண்ட சல்மான் கான் குப்பையாக கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, சில வீடுகளுக்கு வெள்ளையும் அடித்தார். தற்போது …

மேலும் படிக்க

குறுகியக் காலக் கடன்(ரெப்போ)க்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : RBI

ரிசர்வ் வங்கியால் பிற வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில்  நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது தற்போதிருக்கும் 8% ஆகவே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

மேலும் படிக்க

மேக் இன் இந்தியா: இனி சிங்க முகம்!

இறக்குமதியை குறைத்துவிட்டு, இந்தியாவை உற்பத்தி சார்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையுடன் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை இன்று நாட்டிற்கும் உலகிற்கும் அறிமுகம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தை பிரபலப்படுத்தவும், அதுகுறித்த விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளவும் http://www.makeinindia.com என்ற பிரத்யேக வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெப்சைட்டில் மொத்தம் 25 துறைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் சிங்க முகத்தை இனி பார்க்கலாம் என்கிற ரீதியில் ஒவ்வொறு …

மேலும் படிக்க

டெல்லி திகார் ஜெயிலில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம்

கடந்த சில வாரங்களில் நடந்துள்ள மர்மமான இறப்புகளை அடுத்து திகார் சிறையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. முகேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் திகார் சிறையில், 4-வது முறையாக மர்மமான முறையில் கைதி இறந்த சம்பவம நடந்துள்ளது. டெல்லியில் உள்ள திகார் …

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் ஆசிரியர் தின உரையை பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நாடு முழுவதிலும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் பலவேறு நிகழ்ச்சிகளில் மாணவ மாணவியர்களிடம் உரையாற்றி வந்துள்ளார். எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். நாட்டில் முதல் முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்காகவும், அன்றைய தினம் பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் வீடியோ …

மேலும் படிக்க

2 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி இப்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இதில் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி …

மேலும் படிக்க

மலிவு விலை விமான டிக்கெட்: செயலிழந்த ஏர் இந்தியா வெப்சைட்

ஏர் இந்தியா தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் அறிவித்த சலுகை விலையிலான ரூ.100 டிக்கெட்டை பெற மக்கள் முயன்றதால் அதன் இணையதளம் www.airindia.com செயல் இழந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒன்றாக்கப்பட்டன. இந்த 2 நிறுவனங்கள் ஒன்றான நாளை கொண்டாட ஏர் இந்தியா தினம் அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா ரூ.100க்கு விமான டிக்கெட் அளிப்பதாக …

மேலும் படிக்க

சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க 3 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் பரிந்துரையை அந்நாடு நிராகரித்தது. முன்னதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கொழும்புவில் இந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டார். அந்தக் கருத்தரங்கில் பேசிய அவர், “மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவின் தரமான மீன்கள், இறால்கள் முழுவதும் பிடிக்கப்பட்டுவிட்டன. ஏற்றுமதித் …

மேலும் படிக்க