Tag Archives: இந்தியா

உலக ரத்ததான தினம்: இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்

உலக ரத்ததான தினம் உலக ரத்ததான தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “உலக ரத்ததான தினமான இன்று ரத்ததானம் செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ரத்ததானம் செய்வது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவை. ரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று நாம் மீண்டும் உறுதிமொழி ஏற்போம். எனது …

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு இல்லை – மத்திய அமைச்சர்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தெரிவித்தார். தற்போதைய விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று கூறியுள்ள அவர், மக்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களின் எண்ணிக்கையும் 12-ஆக அதே நிலையில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல்விலை குறித்து மத்திய அரசு தான் …

மேலும் படிக்க

இமாச்சல பிரதேசத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காட்சி

இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற …

மேலும் படிக்க

அனைத்து குடிமக்களின் உரிமையையும் புதிய அரசு பாதுகாக்கும் – குடியரசுத் தலைவர் உரை

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுமித்ரா மகாஜனுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடந்து முடிந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது. நிலையான அரசு அமைய …

மேலும் படிக்க

வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் மனைவி இந்து வின் உருக்கமான கவிதை

மேஜர் முகுந்த் வரதரஜானின் காதல் மனைவி இந்து ரிபெக்கா வர்கீஸ். கேரளத்தைச் சேர்ந்த ரிபெக்கா, தனது கணவரின் வீர மரணத்தால்,  நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தால் பெருமைப்படுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனைவியாக, அவர் தனது கணவரின் மரணத்தால் எந்த அளவுக்கு உடைந்து போயிருக்கிறார் என்று அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தான் முகுந்த் மீது வைத்திருந்த அன்பை, பாசத்தை, நேசத்தை ஆங்கிலத்தில் தனது …

மேலும் படிக்க

சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார் மோடி: பிரியங்கா காந்தி

[pullquote] குழந்தைத்தனமாக பேசாமல், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நீங்கள், அந்த பதவிக்கான மதிப்பை அளிக்க வேண்டும்[/pullquote] அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆதிரித்து, அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பேசும்போது, “ராகுல் காந்தி எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர். சில எதிர்க்கட்சி தலைவர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். ராகுல் குறித்து அவர்கள், “இளவரசர்” என்றும் மற்றொரு சமயத்தில் ‘காமெடியன்’ என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். …

மேலும் படிக்க

மும்பையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம்

மும்பையில் கட்டி முடிக்கப்பட்ட டபுள் டக்கர் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சான்டாக்ரூஸ் சேம்பர் லிங்க் ரோடு(SCLR) என்ற இந்த மேம்பாலம், பல மைல் தொலைவு பயணத்தைக் குறைத்திருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மேம்பாலத்தில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கவும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் விதித்துள்ளனர். இதனை இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்கின்றனர். …

மேலும் படிக்க

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டு

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தொடர்பான உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என்பது கோர்ட்டு உத்தரவை மீறும் விதமாக உள்ளது என்று எனக்கு கடிதம் வந்துள்ளது என்று நீதிபதி பி.எஸ். சவுகான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று உத்தரவிட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.  இது தொடர்பான விசாரணையில் …

மேலும் படிக்க

9/11 தாக்குதல் போல விமானத்தைக் கொண்டு இந்தியாவில் தாக்குதலா? சல்மான் குர்ஷித் மறுப்பு

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கொண்டு, இந்தியாவில் உள்ள உயர்ந்த கட்டங்கள் மீது மோதி அமெரிக்காவில் நடந்த 9/11 போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எந்த தகவலும் இல்லை, அது குறித்து வெளியான தகவல்களும் உண்மையில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில், இந்தியா, மலேசிய அரசுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. விமானத்தைத் தேட …

மேலும் படிக்க