Tag Archives: தமிழகம்

பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தப் பிரிவினருக்கு மொத்தமுள்ள 500 இடங்களுக்கு …

மேலும் படிக்க

நாளை டிஎன்பிஎஸ்சி விஏஓ தேர்வு – காலியாக உள்ள இடங்கள் 2,342

திருச்சி: தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 விஏஓ பணியிடங்களை நிரப்ப நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நாளை தேர்வு நடத்துகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்  வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுவோர் …

மேலும் படிக்க

சிபிசிஐடிக்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி.க்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை திறந்து வைத்தார். இன்று காலை 11.30 மணிக்கு கட்டடத் திறப்பு திறப்பு விழா நடைபெற்றது.  இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று கட்டடத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை …

மேலும் படிக்க

“அம்மா உப்பு” நாளை முதல் விற்பனைக்கு வருகிறது

அம்மா உப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் மலிவு விலையிலான அம்மா உப்பு நாளை முதல் விற்பனைக்கு வருகிறது. இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. முதல் வகை உப்பு ரூ.14க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.22க்கு விற்கப்படுகிறது), 2–வது வகை …

மேலும் படிக்க

முழு உற்பத்தித் திறனான1000 மெகா வாட்டை எட்டியது கூடங்குளம் முதல் அணுஉலை

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை அதன் முழு உற்பத்தித் திறனை எட்டியது. சரியாக பிற்பகல் 1.20 மணிக்கு அணுஉலை 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில்: “கூடங்குளம் அணுஉலையில் மூன்று இலக்கங்களில் இருந்த மின் உற்பதித் திறன் 4 இலக்கத்தை எட்டிய நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்துனை ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக …

மேலும் படிக்க

சென்னையில் மே 1 முதல் 2 மணி நேரம் மின்தடை – உங்கள் ஏரியாவில் எப்போது மின் தடை அறிந்து கொள்ளுங்கள்

மே 1ம் தேதி முதல் சென்னையில் 2 மணி நேர மின் தடை அமலுக்கு வருகிறது. மின்சார வாரியம் அறிவித்துள்ள, சுழற்சி முறையில் மின் தடை அமலாகும் பகுதிகளின் விவரம் : காலை 8 மணி முதல் 10 மணி வரை புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணா சாலை (ஒரு பகுதி), கதீட்ரல் சாலை (ஒரு பகுதி), தியாகராய நகர், பாண்டி பஜார், தெற்கு …

மேலும் படிக்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை

நாகர்கோவில்: ஏப், 30 கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், பூதப்பாண்டி, தக்கலை, குளச்சல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. சுமார் 12.30 மணியளவில் ஆரப்பித்த மழை 2 மணி வரை பெய்ததது. தற்போது சற்று ஓய்ந்துள்ளது. இந்த மழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெயில் தனிந்து குளு குளு சூழல் உருவாகியுல்ளது, இதனால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

வெற்றி பெற்றதாக போஸ்டர் வைத்தது தொடர்பாக அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு: தேர்தல் ஆணையர் பிரவீண்குமார்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர் அடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார். மேலும் காஞ்சிபுரத்தில் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக போஸ்டர் அடித்த விவகாரத்தில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக நேற்று காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட …

மேலும் படிக்க

1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி – காஞ்சிபுரத்தில் தேர்தல் முடிவு வரும் முன்பே வெற்றி அறிவிப்பு பேனரால் பரபரப்பு

தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அதிமுகவினர் வைத்த வாழ்த்து பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில், வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழகம் …

மேலும் படிக்க

வறுத்தெடுக்கிறது கோடை வெயில்: திருச்சியில் அதிகபட்சமாக 107 டிகிரி

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்  அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருப்பதா மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். நேற்றைய வானிலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் வேலூரில் 105 பாரன்ஹீட்டும், சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 95 …

மேலும் படிக்க