Tag Archives: தேர்தல்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அறிமுக கூட்டம்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அவர்களின் அறிமுக கூட்டம் இராயபுரம், அறிவகம் திருமண மாளிகையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

​இந்தியாவில் மதவெறிக்கு இடமில்லை என்பது பீகார் தேர்தல் மூலம் நிரூபனம்: ஜவாஹிருல்லா

இந்தியாவில் மதவெறிக்கும், வெறுப்புணர்விற்கும் இடமில்லை என்பதை பீகார் மக்கள் தங்களது வாக்குச்சீட்டுகள் மூலம் நிரூபித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ஊடகத்துறை, விமானத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டை கொண்டுவரும் மத்திய அரசின் முடிவு ஆபத்தானது என கூறினார்.  நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கும் …

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் சங்கத்தை பிளவுப் படுத்துவதாக அர்த்தம் இல்லை என்றும் விஷால் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் சேலத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கினர். முன்னதாக செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சியை …

மேலும் படிக்க

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  வாக்காளர் விவரங்களை http://www.elections.tn.gov.in/ இந்த இணையதளத்தில் காணலாம்.

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி முதல்  நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு …

மேலும் படிக்க

சமத்துவ மக்கள் கட்சி – அதிமுக கூட்டணி தொடரும்: சரத்குமார்

வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அக் கட்சியின் தலைவர் சரத்குமார் கொடியேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் …

மேலும் படிக்க

சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி 5வது நாளாக இன்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி …

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி வெற்றி

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது.  இதையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி மற்றும் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொள்கையுடைய அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவதோடு அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க கூடிய புதிய நாடொன்றை உருவாக்குவதாக பிரதமர் …

மேலும் படிக்க

முற்றிலும் மாறுபட்ட சூழலில் இம்முறை இலங்கைத் தேர்தல்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். ‘ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல் கால சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வன்முறைகள் மிகவும் குறைந்திருக்கின்றன’ என்று பெஃப்ரல் என்கின்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த கால தேர்தல்களின்போது, அரச சொத்துக்களும் வளங்களும் அரசியல் தேவைகளுக்காக …

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. அந்த புகார் மனுவில், வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவரின் புகைப்படம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால் அவர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் பதிவாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இது குறித்து திமுக சார்பில் …

மேலும் படிக்க