Tag Archives: போலீஸ்

மூன்றாவது கண் (CCTV) திறப்பு விழா…

சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை ஆணையாளர் எல்லைக்குட்பட்ட சூளைமேடு காவல் நிலையம் பகுதியினை சார்ந்த கிழக்கு நமச்சிவாயாபுரம் பகுதியில் சிசிடிவி கேமராவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நுங்கம்பாக்கம் காவல்நிலைய சரகத்தின் உதவி ஆணையாளர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் திறந்து வைத்தார். இப்பகுதியில் மக்களின் நிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் 23 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூட்டு நடவடிக்கை குழு தலைவர் திரு.T. பெருமாள் நம்மிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக PPFA மாநில …

மேலும் படிக்க

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் தீவிர விசாரணை

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை மற்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பெறபட்ட ஆவணங்களைக்கொண்டு சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி நாமக்கல்லில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவர் இன்று ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா திருச்செங்கோடு டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பொறியாளர் கோகுல்ராஜ் …

மேலும் படிக்க

மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது

சேலம் அருகே பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பூரண மது விலக்கு குறித்த அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வலியுறுத்தி மறைந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். சேலம் …

மேலும் படிக்க

ஷாப்பிங் வித் ரவுடி! 6 டெல்லி போலீஸ் பணியிடை நீக்கம்

ரவுடி மனோஜ் பக்கர்வாலாவை டெல்லி போலீசார் கடந்த 27ம் தேதி திகார் சிறையில் இருந்து ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதன் பிறகு திகார் சிறைக்கு வரும் வழியில் தனக்கு ஷூ வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுமாறும், அவ்வாறு அழைத்துச் சென்றால் போலீசாருக்கும் ஷூ வாங்கிக் கொடுப்பதாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து துணை சப் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மனோஜுடன் ஷாப்பிங் …

மேலும் படிக்க

திருமாவளவன் மீது முதல்வர் தனிப் பிரிவில் பெண் புகார்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். திருமாவளவன் என்னிடம் பழகிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். டிஜிபி அலுவலகத்தி லும், முதல்வர் தனிப் பிரிவிலும் புகார் அளித்ததால் எனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவை போலீஸ் கமிஷனர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். அவர் மீது நம்பிக்கை இழந்ததால்தான் இந்த புகாரை முதல்வரின் தனிப் பிரிவில் …

மேலும் படிக்க

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமனம்

தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) அசோக் குமாரை நியமனம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. பதவி நீட்டிப்பில் டி.ஜி.பி.யாக இருந்து செவ்வாய்க்கிழமையுடன் பணி நிறைவடையும்  கே.ராமானுஜத்தை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம்: தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக இருந்த கே.ராமானுஜம் செவ்வாய்க்கிழமை(நவ.4) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, அந்தப் பணியிடத்துக்கு …

மேலும் படிக்க

மக்கள் விழிப்புணர்வு பெற உங்கள் உதவி தேவை – காவல்துறை உதவி ஆணையர் வேண்டுகொள்.

நாலு பேருக்கு நன்மை செஞ்சா நல்லவங்களை விடமாட்டாங்க…. என்ற பாடல் வரிகளை பொய்யாக்கி வருவதில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் தங்கள் பணியில் அர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பதற்கு அடையாளம்தான் மணலி புது எம்ஜிஆர் நகரில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்கள். மணலி, மாதவரம் நகரியம் (PPFA) தலைவர் எஸ். மாபு பாஷா தலைமையில் மணலி நகரியம் (PPFA) …

மேலும் படிக்க

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திலும் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படையினருக்கு உத்தரவு

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.இதனால் அனைத்து வாகனங்களையும் சோதனையிட ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை தொகுதியின் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்பிரமணியன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், மாவட்டம் முழுவதும் போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. பணம், பொருள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். இதையடுத்து போலீஸ் வாகனங்களையும் தேர்தல் …

மேலும் படிக்க

ஹேர் ஸ்டைலை பார்த்தா தெரியல டீசண்ட்டா ஆளுன்னு – சினிமா ஸ்டைல் திருடன்

சென்னையில் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்று மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்கிற நிலையில்அதனை விழுங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் முயற்சியால் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சை மூலம் அந்த தங்கச் சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. சென்னை புனித தாமஸ் மவுண்டை சேர்ந்த தனலட்சுமி, தனது உடல்நலம் பாதிக்கப் பட்ட தந்தையை கவனித்துக் கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு …

மேலும் படிக்க