Tag Archives: அரவிந்த் கெஜ்ரிவால்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கேஜ்ரிவால் திட்டம்

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியில் நிலவும் மின் பற்றாக்குறை குறித்து பேச, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். டெல்லியில் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினை தற்போது அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருவதால், மின் நெருக்கடியைக் குறைக்க அந்த துறை அதிகாரிகளுடன் ஆளுநர் நஜீப் ஜங் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை …

மேலும் படிக்க

தாக்கியவரை நேரில் சந்தித்த கெஜ்ரிவால்.. மன்னிப்பு கேட்டார் அடித்த ஆட்டோ டிரைவர்

டெல்லி சுல்தாபுரில் பிரசாரம் செய்த போது லாலி என்ற ஆட்டோ டிரைவர் திடீரென கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்து விட்டார். லாலியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று லாலி வீட்டுக்குப் சென்ன்றார். பின்னர் லாலிக்கு அவர் மாலை அணிவித்து, அவரிடம் பேசினார். கன்னம் வீங்கிய நிலையில் காணப்பட்ட கெஜ்ரிவாலிடம் லாலி மிகவும் உருக்கமாகப் பேசி மன்னிப்பு கோரினார். லாலி கெஜ்ரிவாலை அடித்ததுமே அவரை ஆம் ஆத்மி கட்சியினர் …

மேலும் படிக்க

ஒரு புயல் வந்து கொண்டிருக்கிறது (A Storm is Coming) – ஆம் ஆத்மி பார்ட்டி

A Storm is Coming , புரட்சி ஆரம்ம்பித்துவிட்டது என்ற பெயரில் ஆம் ஆத்மி பார்ட்டி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொகுப்பு

மேலும் படிக்க

மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு சிறை: கேஜ்ரிவால் எச்சரிக்கை

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். மோடியிடம் இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களை ஜெயிலுக்கு அனுப்புவேன் …

மேலும் படிக்க

ஆம் ஆத்மியின் தமிழக தலைவர் உதயகுமார்?

ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் இணைந்த கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை கட்சியின் மாநிலத் தலைவராக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விரைவில் இடிந்தகரைக்கு வரவுள்ள கெஜ்ரிவாலே இதை நேரடியாக அறிவிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார் மற்றும் அவர் போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோரும் ஆம் ஆத்மியில் இணைந்தனர். தமிழகத்தில் இந்தக் கட்சி …

மேலும் படிக்க

கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம் ரூபாய் 20,000 மட்டுமே!

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். முக்கிய நகரங்களுக்கு கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செல்வதால் ஆம்ஆத்மி கட்சிக்கு நிறைய பணம் செலவாகிறது. இதுவரை சேகரித்த பணத்தில் கணிசமான தொகை செலவாகி விட்டது. அடுத்து முக்கிய வேட்பாளர்களுக்கான செலவை கட்சியே ஏற்க வேண்டியதுள்ளது. தற்போது …

மேலும் படிக்க

குஜராத்தின் நிலை உண்மையா? கண்டறிய சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் கைது

இந்தியாவில் குஜராத்தை முன்னோடி மாநிலமாக்கியுள்ளதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்நிலையில் அவர் கூறுவது எல்லாம் உண்மை தானா என்பதை கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் சென்றார். வடக்கு குஜராத்தில் உள்ள ரதன்பூருக்கு செல்லும் வழியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ரதன்பூரில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதியை …

மேலும் படிக்க

கியாஸ் விலை உயர்வு விவகாரம், நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

சர்ச்சைக்குரிய கியாஸ் விலை உயர்வு  விவகாரம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக் கிழமை கேட்டுக் கொண்டார். நரேந்திர மோடி ரிலையனஸ் நிறுவனதின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இவ்விவகாரம் தொடர்பாக …

மேலும் படிக்க