Tag Archives: மோடி

மங்கள்யான் அனுப்பிய முதல் படம்: இஸ்ரோ வெளியிட்டது

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO’s Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 10 செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு புகைப்படங்களை வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. …

மேலும் படிக்க

“மேக் இன் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்தின் துவக்க விழாவில், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை துவக்கி வைத்த வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு …

மேலும் படிக்க

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: ஐ.நா. சபையில் வலியுறுத்துகிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முக்கிய நிகழ்வாக, ஐ.நா. சபையில் வரும் 27ஆம் தேதி உரையாற்றுகிறார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து, தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் முதல்முறையாக, வரும் 26ஆம் தேதி …

மேலும் படிக்க

மங்கள்யான் வெற்றி இந்தியர்கள் கொண்டாட வேண்டிய தருணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார். இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார். அப்போது,  இந்திய அணி …

மேலும் படிக்க

செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைகிறது மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) சார்பில், கடந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக விண்வெளியில் பறந்து செவ்வாய்க்கிரக ஈர்ப்பு விசைக்குள் சென்றது. செப்டம்பர் 24-ஆம் தேதி காலை 7.17 மணி 32 நொடிக்கு 440 நியூட்டன் திரவ …

மேலும் படிக்க

இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் காலமானார் – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாசன். இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை …

மேலும் படிக்க

சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி. சீன அதிபர் இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்தும் மற்றும் நீண்ட நாட்களாக இரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் சீன இராணுவத்தின் சமீபத்திய ஊடுறுவல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 1996-ல் ஜியாங் ஜீமென் , 2006–ல் ஹூஜிண்டாவோ ஆகியோரை அடுத்து …

மேலும் படிக்க

எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் – பிரதமர் மோடி

தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறும் தனது நண்பர்களையும், நல விரும்பிகளையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் உள்பட நாடு முழுவதும் வரும் 17ஆம் தேதி, அவரது 64ஆவது பிறந்த நாளைக் கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ள நிலையில், மோடி இவ்வாறு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து மோடி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: எனது பிறந்த நாளுக்காக …

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் ஆசிரியர் தின உரையை பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நாடு முழுவதிலும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் பலவேறு நிகழ்ச்சிகளில் மாணவ மாணவியர்களிடம் உரையாற்றி வந்துள்ளார். எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். நாட்டில் முதல் முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்காகவும், அன்றைய தினம் பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் வீடியோ …

மேலும் படிக்க

ஜப்பான் மொழியில் மோடி ட்வீட்

பிரதமர் ஜப்பான் செல்லவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய மொழியில் ட்விட்டரில் தனது கருத்துகளை தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜப்பானிய மொழியில் மொத்தம் 8 ட்வீட்களை பதிவு செய்துள்ள அவர், அவற்றில் இரண்டில் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவையும் டேக் செய்துள்ளார். இது குறித்து ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், “ஜப்பானிய நண்பர்கள் பலர் நான் அந்நாட்டு மக்களுடன் ஜப்பானிய மொழியில் நேரடியாக தொடர்பு …

மேலும் படிக்க