கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அமிர்தம் உட்பட 19 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.
கலைஞர் டிவி உட்பட 9 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப் பரிவு தொடர்ந்த வழக்கில் டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி