விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இரண்டு ஆட்டத்தில் ஒன்றில் நெதர்லாந்தை இலங்கை வென்றது. மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இங்கிலாந்து பரிதாபமாக தோற்றது. கிரிக்கெட் விளையாட்டில் தன்னை விட ஜாம்பவான் யாருமில்லை இல்லை என்பது இங்கிலாந்துக்கு புரிய வைத்த தென்னாப்பிரிக்கா அணி. துவண்டு போனது இங்கிலாந்து.

மேலும் படிக்க

கிரிக்கெட் ரசிகர்கள் துள்ளலாமே!

கிரிக்கெட் ரசிகர்கள் துள்ளலாமே! 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்பால், சாஃப்ட்பால், ஸ்குவாஸ் உள்ளிட்ட போட்டிகளும் சேர்க்கப்படவுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க

சர்வதேச டென்னிஸ் தர வரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் சானியா முதலிடம்

சர்வதேச டென்னிஸ் தர வரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்தில் உள்ளார். உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆடவர் ஒற்றையர் தர வரிசையில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 20 இடங்கள் முன்னேறி, 125வது இடத்தை பிடித்துள்ளார். சோம்தேவ் 12 இடங்கள் பின்தங்கி 164வது இடத்தை பெற்றுள்ளார். சகெத் மைனெனி 195வது இடத்திலும், ராம்குமார் …

மேலும் படிக்க

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச், 2-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஃபெடரரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். 2வது செட்டை ஃபெடரர், 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி …

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: 3 பதக்கங்கள் உறுதி

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின், அரையிறுதிக்கு, இந்திய வீரர்கள் ஷிவ் தாப்பா, தேவேந்திரோ சிங், விகாஷ் கிருஷ்ணன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்கு, மூன்று பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் 56 கிலோ எடைப் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷிவ் தாப்பா,  கிர்கிஸ்தானின் வீரரை எதிர்த்து …

மேலும் படிக்க

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. கொழும்பு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று 386 ரன்கள்  வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, …

மேலும் படிக்க

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தேர்வு

பிரேசிலில் 2016 ம் ஆண்டு நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. லண்டனில் நடைபெறும் ஐரோப்பிய சாம்பியன் ஷிப் போட்டியில், ஸ்பெயின் அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 1980 ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய மகளிர் அணி ஒலிம்பி போட்டிக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் 35 ஆண்டுகளுக்கு பின்னர், …

மேலும் படிக்க

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார்.  இந்த போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் 9.80 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும் ட்ரேவான் பிரம்மால்,ஆன்ட்ரே டி கிராஸ்சஸ் ஆகியோர் …

மேலும் படிக்க

பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப்: இந்திய வீராங்கனை அதிதி அசோக் வரலாற்று சாதனை

இந்தியாவின் இளம் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லீட்ஸ் நகரில் லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், அதிதி அசோக் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம், லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் பெறும் முதல் இந்திய வீராங்கனையாகிறார் அதிதி அசோக். பெங்களூரை சேர்ந்த இவர் …

மேலும் படிக்க

உலக தடகள சாம்பியன் போட்டிகள் பீஜிங்கில் நாளை துவக்கம்

மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகத் தடகளச் சாம்பியன் போட்டிகள் சனிக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கில் தொடங்குகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்ற போதிலும், இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை ஜமைக்காவின் உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது ஊக்க மருந்து பயன்படுத்தி, பரிசோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டிருந்த காலத்துக்கு பின்னர் …

மேலும் படிக்க