பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப்: இந்திய வீராங்கனை அதிதி அசோக் வரலாற்று சாதனை

இந்தியாவின் இளம் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள லீட்ஸ் நகரில் லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், அதிதி அசோக் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி மூலம், லேடீஸ் பிரிட்டிஷ் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் பெறும் முதல் இந்திய வீராங்கனையாகிறார் அதிதி அசோக்.

பெங்களூரை சேர்ந்த இவர் இதற்கு முன்பு, கடந்த ஜூலை மாதம் செயின்ட் ஆண்ட்ரூவ்ஸில் நடந்த ரூல் டிராபி போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஐரோப்பிய மகளிர் அமெச்சூர் போட்டியில் 2-வது இடத்தை பிடித்திருந்தார்.

இதுவரை 30 நாடுகளில் இருந்து பங்குபெற்ற வீரர்களில் 39 பேரை வென்றுள்ள அதிதி, தற்போது உலக கோல்ப் தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ளார்.

Check Also

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: 3 பதக்கங்கள் உறுதி

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின், அரையிறுதிக்கு, இந்திய வீரர்கள் ஷிவ் தாப்பா, தேவேந்திரோ சிங், விகாஷ் கிருஷ்ணன் ஆகியோர் தகுதி …