அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியா சென்றுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளில் பதவியிலுள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு சென்றுள்ளது இதுவே முதல் தடவை.
பசிபிக் பிராந்திய வணிக ஒப்பந்தம் ஒன்றில் மலேசிய அரசாங்கத்தை கையொப்பம் இடுமாறு ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் எல்லாக் காலங்களிலும் நல்லவிதமாக இருந்ததில்லை.
அமெரிக்க கொள்கைகளை மலேசியப் பிரதமர்கள் பெரும்பாலும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி