ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நடைபெற்றது. தனது சீக்கட்டி ராஜ்யம் தெலுங்கு திரைப்படத்தின் முன்திரையிடல் காட்சியை விஜயவாடாவில் நடத்த அனுமதி கோரியும், அப்படத்தை காண வருமாறு அழைப்பு விடுக்கவும் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது அழைப்பை சந்திரபாபு நாயுடு ஏற்றுக் கொண்டதாகவும் கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவில் ஒரே நாளில் முன்திரையிடல் காட்சிக்கு திட்டமிட்டுள்ளதாகவும், நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி