ஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளான ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்ஸை அறிமுகம் செய்துள்ளது.
ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் முறையே 4.7 மற்றும் 5.5 இன்ச் எல்ஈடி ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 6எஸ் 1334*750 ரெசல்யூஷனும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷனும் கொண்டிருப்பதோடு இரு கருவிகளும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது.
புதிய ஐபோன்களில் 3டி ஃபோர்ஸ் டச் அம்சமும் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஏ9 சிப்செட் மூலம் 70 சதவீதம் சிபியு வேகம் மற்றும் 90 சதவீதம் வேகமான ஜிபியு அனுபவிக்க முடியும், இதனால் அதிக கிராஃபிக்ஸ் கொண்ட வீடியோ கேம்களையும் சிரமம் இன்றி வேகமாக விளையாட முடியும்.
கேமராவை பொருத்த வரை 12 எம்பி ஐசைட் கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது.
இரு ஸ்மார்ட்போன்களும் 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டிருப்பதோடு செல்பீ கேமரா மூலம் 720 பிக்சல் ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும் புதிய கருவிகள் மூன்று மாடல்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி ஐபோன் 6எஸ் 16ஜிபி $649, 64ஜிபி $749 மற்றும் 128ஜிபி $849 என்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 16ஜிபி $749, 64ஜிபி $849 மற்றும் 128ஜிபி $949 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.