ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறைஅமைச்சராக இருந்த மால்கம் டர்ன்புல் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
ஆஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின் போது கவர்னர்-ஜெனரல் பீட்டர் காஸ்க்ரொவ் மால்கம் டர்ன்புல்லுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்றுக் கொண்ட பின் பேசிய டர்ன்புல் வலிமையான நாட்டை உருவாக்க கூட்டாக சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்.