உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபரீதங்கள் ஏறபடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச் ரஷியாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைநகர் கீவ்வில் பல மாதங்களாக போராட்டம் நடந்து இறுதியில் கடந்த சனிக்கிழமை புரட்சி வெடித்தது. அதிபர் விக்டரின் பதவி பறிக்கப்பட்டது.
அதேநேரத்தில் பதவி இழந்த விக்டர் தப்பி தலைமறைவாகி விட்டார். இவர் ரஷியாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ஆகவே ரஷியா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. இருப்பினும் உக்ரைன் எல்லையோரம் ராணுவ ஒத்திகைக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உக்ரைன் நாட்டின் வடக்கே கருங்கடல் பகுதியில் சுயாட்சி பெற்ற தீபகற்பம் அமைந்துள்ளது. இதன் தலைநகர் சிம்பெரோபோல் ஆகும்.
இந்த முக்கிய நகரிலுள்ள பாராளுமன்றம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை கடந்த சில தினங்களுக்கு முன் துப்பாக்கி ஏந்திய கும்பல் திடீரென்று கைப்பற்றியது. பாராளுமன்றம், அரசு அலுவலகங்களில் ரஷிய கொடியை ஏற்றினார்கள். இவர்கள் யார்? என்று அடையாளம் தெரியவில்லை என்று ஒரு தகவல் கூறினாலும் இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் ரஷிய ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, உக்ரைனில் ரஷியா ராணுவத்தினர் ஆக்கிரமிப்பு இருப்பதாக வெளியாகும் தகவல் கவலை அளிக்கிறது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டால் தேவையற்ற விபதரீங்கள் ஏறபடும் என்று அவர் தெரிவித்தார்.