சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வெங்கடேச கிராமிணி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் மூலம் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த அந்த கடையினை நேற்று திறப்பதாக தெரிந்ததும் குடிமகன்கள் குஷியாகி விட்டனர். ஏற்கனவே இந்த கடையால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த கடமையினை திறக்கக்கூடாது என சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மனு அளித்தினர்.
தன்னை தேர்ந்தெடுத்த மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அந்த கடை நிரந்தரமாக மூடுவதற்கான பணிகளை துரிதமாக செய்து, அக்கடைக்கு மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உற்சாகமடைந்தது மட்டுமல்ல உண்மையிலே தேர்தல் பரப்புரரையின் போது “நான் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். உங்கள் குறைகளை உடனுக்கு உடன் தீர்ப்பது தான் என் பணி என சொல்லி தான் வாக்கு கேட்டார். அந்த வகையில் மக்களோடு மக்களாக அவர்களின் குறைகளை தீர்த்து வருவதில் செம வேகமாக செயல்படுகிறார் என பகுதி வாழ் மக்கள் வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியும், படமும்
R.கந்தன்