பெங்களூரு: பெங்களூர் நகரில் இந்தியாவிலேயே முதல் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸை பெங்களூரு மாநகர பேருந்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கி.மீ வரை ஓடும். இந்த பஸ்ஸின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரம் ஆகும். தற்போதைய நிலையில் இந்த பஸ்ஸை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட் பெங்களூருவின் மெஜஸ்டிக் பகுதியில் மட்டுமே உள்ளது. இந்த பஸ்ஸின் மதிப்பு ரூ.2.7 கோடியாகும்.
தற்போது இந்த பஸ் தற்போது பெங்களூருவில் மெஜஸ்டிக் பகுதியிலிருந்து கடுகோடி வரையில் சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இதன் பயணக்கட்டணமாக ரூ.80 வசூலிக்கப்படுகிறது.