போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி,
பாஸ்டர் திரு. ஜான்பீட்டர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் திரு. பிரபாகரன் மற்றும் உறுப்பினர் திரு. ஜோஷ்வா அவர்களது தலைமயில்,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான திரு. S. ஜெயக்குமார் , மாவட்ட தலைவர் திரு. உதயகுமார், துணை செயலாளர்கள் திரு. மணி, திரு. சரவணன் உறுப்பினர் ஜோஷ்வா மற்றும் திரு. சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா , ஆலாடு பஞ்சாயத்து ஏரிமேடு கிராமத்திற்கு சென்றனர்.
மொத்தம் சுமார் 18 குடும்பங்களில் 150 பேர் ( இருளர் ) வசிக்கின்றனர். இவர்களுக்கு வாழ்வதாரமாக பாம்பு பிடித்தல்,விவசாயம் மரம் வெட்டுதல் மற்றும் கூலித் தொழிலில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு இரவு உணவு ( பிரியாணி) வழங்கியது மட்டுமல்லாது அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்